ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிகளவில் கடனை பெற்று, தமிழ்நாட்டு மக்களின் தலையில் கடன் சுமையை அதிகரித்து வரும் திமுக அரசு, நான்காவது காலாண்டில், 25 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக, ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 52 ஆயிரம் கோடி ரூபாயை கடனாகப் பெற்றுள்ளது. இது கடந்த அதிமுக ஆட்சி காலகட்டத்தில் பெறப்பட்ட 51 ஆயிரத்து 950 கோடியை விட சற்று அதிகமாகும்.
மொத்த செலவினம், மொத்த வருவாயை விட அதிகமாகும் போது ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, திமுக அரசு கூடுதல் கடன் பெற்று வருகிறது.
2020ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் அதிமுக அரசு 25 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்த நிலையில், அதைவிட திமுக அரசு கூடுதலாக 800 கோடி ரூபாயை கடனாக பெற்றிருப்பது, தமிழ்நாட்டு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2020-21ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 92 ஆயிரத்து 305 கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஜிஎஸ்டி இழப்பீடாகப் பெறப்பட்ட 8 ஆயிரத்து 95 கோடியைத் தவிர்த்து, 2021-22ம் ஆண்டில், தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 92 ஆயிரத்து 529 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்தாணடைவிட 224 கோடி ரூபாய் கூடுதல் ஆகும். மாநிலத்தின் வருவாயைவிட, செலவினம் அதிகமாக இருப்பதால், அப்படி என்ன நலத்திட்டங்களை திமுக அரசு செய்துவிட்டது என்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசுத்தொகை, மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத திமுக அரசு, அதிகளவில் கடன் பெற்று என்ன செய்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Discussion about this post