ஜனநாயக முறைப்படி வாக்கு அளிக்கக் கோரி துண்டு பிரசுரம் வினியோகித்த அதிமுக பிரமுகர்கள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட நெக்னாமலை பகுதியில் அதிமுக வைச் சேர்ந்த முனுசாமி மற்றும் அவரது தம்பி ஞானவேல் ஆகியோர் ஜனநாயக முறைப்படி வாக்களிக்ககோரி பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கியுள்ளனர். அப்போது இதை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த ஊர் நாட்டாமை, காசி, வேலுமணி உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 10 பேரையும் தேடி வருகின்றனர்.