விஞ்ஞான வீட்டு ஊழலில் சிக்குவாரா திமுகவின் மா.சுப்ரமணியன்? – திடுகிடும் தகவல்

அரசுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்த வழக்கில் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வருவதால், கைதுக்கு பயந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியன் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.திமுக தலைவர் ஸ்டாலினின் வலதுகரம் என்று அழைக்கப்படும் மா.சுப்ரமணியன், விஞ்ஞான ஊழல் செய்து மாமனாரையே மாற்றி, நிலத்தை அபகரித்தார் என்ற குற்றச்சாட்டு குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2016 ம் ஆண்டு திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மா.சுப்ரமணியன் தன்னுடைய வேட்புமனுவில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் குத்தகை மற்றும் விற்பனை ஒப்பந்தம் மூலம், தான் குடியிருந்து வருவதாக தெரிவித்திருந்தார்…

அதே 2016 சட்டமன்ற தேர்தலில் மா.சு க்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்ட பார்த்திபன் என்பவர் மா.சுப்ரமணியன் குடியிருப்பு குறித்து ஆராய்ந்த போது தான் பல திடுக்கிடும் தகல்வல்கள் வெளிச்சத்துக்கு வந்தது…

சுயேச்சை வேட்பாளர் பார்த்திபன், மா சுப்ரமணியன் தற்போது வசித்து வரும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான வீட்டைப் பற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற ஆவணங்களின் மூலம்,
மா.சு போலி சான்றிதழ் மூலம் ஏமாற்றி அவர் தற்போது வசிக்கும் வீட்டை எஸ்.கே கண்ணன் என்பவரிடம் இருந்து அபகரித்துள்ளார் என்பதை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டியுள்ளார்…
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் சிட்கோ விடம் புகார் அளித்த பார்த்திபன், கையோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்…

முதலில் யார் இந்த எஸ்.கே கண்ணன் என்பதை தெரிந்து கொள்வோம்.

இவர் தான் லேபர் காலனியில் மா.சு தற்போது வசிக்கும் வீட்டிற்கு உண்மையான உரிமையாளர். ஆனால் இந்த எஸ். கே கண்ணன் தான் தனது மாமனார் என்றும், அவரது ஒரே மகளான தனது மனைவி காஞ்சனாவுக்கு வீட்டை எழுதி கொடுத்ததாகவும் கூறியுள்ளார் மா.சு.. அதற்கு ஆதாரமாக குடும்ப அட்டையில் எஸ் கண்ணனின் பெயரை போலியாக சேர்த்து சிட்கோ நிறுவனத்திடம் காண்பித்து வீட்டை வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

அதற்கான ஆதாரம் இதோ…

மா.சுப்ரமணியன் குடும்ப அட்டையில் உள்ள எஸ் .கே கண்ணனின் பெயர் மாமனார் என்று உள்ளது.

அப்படியென்றால் எஸ்.கே கண்ணன் தான் மா சுவின் உண்மையான மாமனாரா என்றால், இல்லை என்கிறது மா.சு மனைவி காஞ்சனாவின் பாஸ்போர்ட் விவரம்…

அந்த பாஸ்ப்போர்ட்டில் மா சு மனைவி காஞ்சனாவின் தந்தையார் பெயர் என்ன என்பதைக் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்… சாரங்கபாணி என்ற பெயர் உள்ளது.

இதோ அந்த பாஸ்போர்ட் உங்கள் பார்வைக்கு…

மேலும் மா.சு, மனைவி காஞ்சனா திருமண சான்றிதழிலும், தந்தை பெயர் சாரங்கபாணி என்று தான் உள்ளதே தவிர எஸ்.கே கண்ணன் என்று இல்லை.

இதில் மா சு வின் உண்மையான மாமனார் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் வழக்கு தொடர்ந்த பார்த்திபன்…

அதுமட்டுமில்லாமல் வருவாய் துறையில் எஸ்.கே கண்ணன் பற்றிய வாரிசுதாரர் சான்று சரிபார்க்கும் போது காத்திருந்தது மேலும் ஒரு அதிர்ச்சி…

அதில் உண்மையாக எஸ்.கே கண்ணனுக்கு சாயிலக்ஷிமி, சபிதா, சாந்தி. சசிகலா, சீனிவாசன், சங்கரி என்று 5 மகள்களும் 1 மகனும் மட்டுமே இருக்கிறார்கள். அதில் மாசுவின் மனைவி பெயர் கிடையாது.

மாசுவின் மனைவிக்கு இல்லாத தகப்பனை வீட்டை பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, போலியாக உருவாக்கி மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறுகிறார் பார்த்திபன்.

இதையெல்லாம் விட திமுகவில் வாய்கிழிய பேசும் மா சுப்ரமணியனின் மற்றுமொரு சுவாரசிய விஞ்ஞான வீடு ஊழல் இருக்கிறது.

அது 1998 ஆம் ஆண்டு எஸ்.கே கண்ணன் தன்னுடைய ஒரே மகளான காஞ்சனாவிற்கு தன்னுடைய வீட்டை பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று சிட்கோவிடம் ஒரு வேண்டுகோளை விடுகிறார். அதில் அவர் ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார். ஆனால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் போது, எஸ்.கே கண்ணன் தமிழில் மட்டுமே கையெழுத்து போடுவார்… அவர் ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டு தாங்கள் பார்த்ததே இல்லை என்றும் கூறுகின்றனர் எஸ்.கே கண்ணனின் பிள்ளைகள்.

அப்படி என்றால் அந்த வீட்டு மாற்று பாத்திரத்தில் கையெழுத்து போட்டது யார்?

சிட்கோவிற்கு சொந்தமான அந்த வீட்டைப் பற்றி பார்த்திபன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற ஆவணங்களில், அந்த வீட்டை எம் .ஆர் எலக்ட்ரானிக் காம்போனென்ட்ஸ் நிறுவனத்திற்கு தான் நாங்கள் கொடுத்தோம்.. காஞ்சனாவுக்கு கொடுக்கவில்லை என்று சிட்கோ கூறியுள்ளது.

விதிப்படி சிட்கோ கொடுத்த இடத்தை அதை வாங்கியவர்களின் வாரிசுகள் தான் சொந்தம் கொண்டாடமுடியும். அந்த வகையில் எஸ்.கே கண்ணன் சிட்கோவிடம் இடத்தை வாங்கினார்… அவரது ஒரே மகள் தன்னுடைய மனைவி காஞ்சனா என்று போலியான குடும்ப அட்டையை உருவாக்கி அதை கொண்டு மா சு வீட்டை முறைகேடாக அபகரித்துளார் என்று கூறுகிறார் வழக்கு தொடர்ந்த பார்த்திபன்…

இப்படி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்று முழி பிதுங்கி நிற்கும் மா. சுப்பிரமணியன், இறுதியாக தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என அஞ்சி, வேறுவழியின்றி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரிய நிலையில், போலீசார் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது, எங்கும் தலைமறைவாக கூடாது என்ற நிபந்தனையின் பேரில் முன்ஜாமீன் வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்..

என்னதான் முன்ஜாமீன் பெற்றாலும், துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை அவரது தூக்கத்தை கலைத்து கொண்டிருக்கிறது… மா.சு ஒழுக்க சீலர் என இத்தனை நாளாக காவடி தூக்கிய திமுக உடன்பிறப்புகளும், திமுகவிடம் காசு வாங்கும் இணைய வியாபார போராளிகளும் தற்போது வாய் மூடி ஊமைகளாகவே உலா வருகின்றனர்…

விஞ்ஞான ஊழலுக்கு பெயர் பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினின் வலது கரம் என்ற பெயர் பெற்ற மா.சுப்ரமணீயன் கட்சியின் பெயரை காப்பாற்றும் விதத்தில், தானும் மோசடி ஆசாமிதான் என்பதை நிரூபித்துள்ளார் என்று முனுமுனுக்கின்றனர் பொதுமக்கள்.

Exit mobile version