கீழடியில் நடைபெற்று வரும் ஆராய்ச்சி பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் வருகை இருந்ததாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல்துறை சார்பில் 5 ஆவது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட வந்த ஸ்டாலின் மற்றும் திமுகவினர் ஆராய்ச்சி பணிக்கு இடையூறு அளிக்கும் விதமாகவும், கண்டறியப்பட்ட பொருட்களின் மகத்துவத்தை அறியாது ஏதோ சுற்றுலா வந்ததுபோல் இங்குமங்குமாக சென்று புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவம் தொல்லியல் ஆய்வாளர்களை முகம்சுழிக்க செய்துள்ளது.
அரசியல் நாடகத்திற்காக இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. பழங்காலம் தொட்டு தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக திகழக்கூடிய இந்த பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் திமுகவினர் ஈடுபட்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.