இப்ப என்ன சொல்லப் போகிறார் ஸ்டாலின்…

ஆட்சி பொறுப்பு எங்களுக்கு கொடுங்கள் நாங்கள் சிறப்பான ஆட்சியை தருகிறோம், என மேடைக்கு மேடை வாய் கிழிய பேசிய ஸ்டாலின், தற்போது தங்கள் கட்சியின் பொருளாளர் வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்ததற்கு, என்ன பதில் சொல்ல போகிறார்.

மூட்டை மூட்டையாக கைப்பற்றிய பணம் அப்பாவி மக்களிடமிருந்து அடித்து பெறப்பட்டது என்றா, அல்லது, எங்கள் கட்சியினர் வியர்வை சிந்தி உழைத்தது என்றா, எப்படி கணக்கு காட்ட போகிறீர்கள் ஸ்டாலின் அவர்களே…

அப்படி வியர்வை சிந்தி உழைத்திருந்தாலும் கூட எப்படி மூட்டை மூட்டையாக சம்பாரிக்க முடியும்?… சில பண மூட்டைகளில் தளபதி என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதே, அந்த பணம் நீங்கள் கொடுத்தா, அல்லது, உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டியதா?

அது மட்டுமில்லாமல், துரைமுருகனின் சிமெண்ட் குடோன், கல்லூரி என, மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதே, இதெல்லாம் யாருடைய பணம்?…

தேர்தலில் பணம் பட்டுவாடா செய்து எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என நினைத்து, மீண்டும் உங்கள் கட்சியை தில்லு முல்லு கழகம் என நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.

இப்படிப்பட்ட குறுக்கு வழியெல்லாம் உங்களுக்கு மட்டும் தானே தெரியும்…

மனதில் பட்டத்தை மட்டும் பேசுவேன் என்று வரிஞ்சு கட்டும் துரைமுருகன் அவர்களே, இதற்கு என்ன சப்பை கட்டு கட்டப்போகிறீர்கள்…

பொய் வழக்கு போடுவது, பூச்சாண்டி காட்டுவது இதற்கெல்லாம் பயந்தவன் திமுகவின் கடமட்டத்தில் கூட கிடையாது என கூறிய துரைமுருகனும், ஸ்டாலினும் தற்போது தங்கள் முகத்தை எங்கே வைத்து கொள்ளப்போகிறார்கள்…

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி ராதாரவியை நீக்கிய ஸ்டாலின் அவர்களே, கருப்பு பணத்தை பணத்தை பதுக்கி வைத்திருக்கும் உங்கள் அண்ணன் துரைமுருகனை கட்சியை விட்டு நீக்க தயாரா?

Exit mobile version