குடியுரிமை சட்டம் பற்றி தவறான தகவலை பரப்புகிறது திமுக: பொன்.ராதாகிருஷ்ணன்

என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை சட்டம் பற்றி, மாணவர்கள் மத்தியில் தவறான கருத்துக்களை திமுகவினர் பரப்பி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில், அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது என்று தெரிவித்தார்.

Exit mobile version