திமுக மூத்த நிர்வாகிகள் கூட உதயநிதி ஸ்டாலினின் பின்னால் கைகட்டி நிற்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியினரின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் சீனிவாசன், திமுகவை வழிநடத்துவதற்கு ஸ்டாலினுக்கு சக்தி உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
பல ஆண்டுகளாக திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் கூட உதயநிதி ஸ்டாலினின் பின்னால் கைகட்டி நிற்பதாகவும் அவர் கூறினார். சினிமா நடிகராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினை வைத்து கட்சியை வளர்க்கலாம் என்றும் கூட்டத்தை கூட்ட வேண்டும் ஸ்டாலின் நினைப்பதாகவும் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.