ரெட்டேரி அருகே மதுபோதையில் திமுக பிரமுகர் வயதான தம்பதியினரை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை மாதாவரம் பகுதியில் வசித்து வரும் தசரதன் திமுகவில் 32வது வட்ட துணை செயலாளாராக உள்ளார். இவர் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளையும், தொழில் அதிபர்களையும் மிரட்டி பணம் பறித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரெட்டேரி அருகே புதிதாக திறக்கப்பட்ட பல்பொருள் அங்காடிக்கு மதுபோதையில் சென்ற தசரதன், தன்னிடம் அனுமதி வாங்காமல் எப்படி கடை திறந்தாய் என்றும், தனக்கு கொடுக்க வேண்டியதை கொடு எனவும் கூறி தகராரில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதனை தடுக்க முயன்ற முதியவரை திமுக பிரமுகர் தசரதன் தகாத வார்த்தைகளால் திட்டியும், எட்டி உதைத்தும் தாக்கி உள்ளார்.
சம்பவம் குறித்து முதியவரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மசாஜ் சென்டரில் பெண்ணை தாக்குவது, உணவகத்தில் தாக்குதல் நடுத்துவது, பண மோசடி, சிறுமிக்கு பாலியல் தொல்லை என தொடர்ந்து அராஜ போக்கில் செயல்பட்டு வரும் திமுக பிரமுகர்கள், ஆட்சியில் இல்லாத போதே இது போன்று செயல்படுவது மக்களிடையே பெரும் வெருப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.