அம்மாவிடம் தோற்ற டெக்னிக்கை மீண்டும் கையிலெடுத்த திமுக

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது, பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் மூலம், திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று பொதுமக்களிடையே பரப்பப்பட்டது. உதாரணமாக INDIA TODAY, AXIS மற்றும் NEWS X செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்து கணிப்பில், திமுக 140 இடங்களில் வெற்றிபெறும் என்று கணித்திருந்தது.

ABP NEWS வெளியிட்ட கருத்துகணிப்பில் 132 இடங்களும், NEWS NATION வெளியிட்ட கருத்துகணிப்பில் 118 இடங்களும், NDTV வெளியிட்ட கருத்துகணிப்பில் 120 இடங்களையும் திமுக வெல்லும் என்று வெளியிட்டு, மக்கள் மனதை மாற்ற முயற்சித்தன. புரட்சித்தலைவி ஜெயலலிதா மீது நம்பிக்கை இழக்காத தமிழக மக்கள், மீண்டும் அதிமுக தலைமையிலான ஆட்சிக்கே வாக்களித்து, திமுக தரப்பின் போலி கருத்து கணிப்புகளை பொய்யாக்கினர்.

2016 தேர்தலில் திமுக கூட்டணி 97 இடங்களையே பெற்றது. இந்நிலையில், திமுகவின் தூண்டுதலின் பேரில், தற்போது கருத்துகணிப்பு முடிவுகள் என்ற நாடகங்கள் மீண்டும் அரங்கேற தொடங்கியுள்ளன. இதுபோன்ற கருத்து திணிப்புகளுக்கு தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Exit mobile version