திமுக பிரமுருக்கு சொந்தமான வீட்டில் காவல்துறை சோதனை

கோவையில், திமுக பிரமுகருக்கு சொந்தமான வீட்டில், பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, புதிய பணத்திற்கு மாற்றி வந்தது, காவல்துறை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

கோவையை அடுத்த வடவள்ளியில், திமுக பிரமுகரான ஆனந்தன் என்பவருக்கு சொந்தமாக ஒரு பங்களா உள்ளது. இந்த வீட்டை ஷேக் மற்றும் ரஷீத் ஆகிய இருவருக்கு திமுக பிரமுகர் வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும், 2 லட்சம் ரூபாய் பழைய நோட்டுகளை கொடுத்தால், அதற்கு பதிலாக 1 லட்சம் ரூபாய் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த மத்திய புலனாய்வு பிரிவினர், கோவை மாவட்ட காவல்துறைக்கு அளித்த தகவலின் படி, காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு வரும் தகவலறிந்த ஷேக் மற்றும் ரஷீத், அதிகாரிகள் வருவதற்கு முன்னரே தப்பியோடினர். அவ்வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யபட்டது.

மேலும், கைப்பற்றப்பட்ட பணக்கட்டுகளில், முதல் தாள் மற்றும் கடைசி தாள்களில் பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து விட்டு, அதன் இடையே வெறும் காகிதங்கள் வைக்கபடிருப்பதும் தெரியவந்தது. தப்பியோடிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகிறனர்.

Exit mobile version