திமுக பிரமுகர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த நிலம் மீட்பு

சென்னை பெரம்பூரில் திமுக பிரமுகர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருந்த 30 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை காவல்துறை உதவிடன் வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே திருவேங்கடம் நகரில் அரசுக்கு சொந்தமான இருப்புபாதை காவலர்களுக்கான குடியிருப்பு நிலம் உள்ளது. இதனை திமுகவின் திரு.வி.க.நகர் பகுதி அவை தலைவர் மறைந்த பி.கே.ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வாடகைக்கு விட்டு வந்தனர். இது தொடர்பாக மத்திய இருப்பு பாதை போலீசார் தொடர்ந்த வழக்கில், இடம் இருப்பு பாதைக்கு செந்தமான நிலம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து, காவல் துறை உதவியுடன் 2600 சதுர அடி நிலத்தினை வருவாய்துறை அலுவலர்கள் மீட்டனர். இதன் மதிப்பு சுமார் 30 கோடியாகும், மீதமுள்ள 4200 சதுர அடி நிலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் உள்ள பொருட்களை எடுக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கையகபடுத்தபடும் நிலத்தில் விரைவில் ரயில்வே போலீசாருக்கு குடியிருப்பு கட்டிடம் கட்ட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version