குடும்ப தகராறில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திமுக பிரமுகர்

தூத்துக்குடியில் குடும்ப தகராறில் திமுக பிரமுகர் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சின்னகடை தெருவில் வசித்து வருபவர் திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் தலைவர் பில்லா ஜெகன். இவர் தனது சகோதரர் சிமன்ஜியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இருவரிடையே ஏற்பட்ட தகராறில் பில்லா ஜெகன் தனது தம்பி சிமன்ஜியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பில்லா ஜெகன் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version