திமுக ஆட்சியில் லீலாவதி கொலை முதல் தா.கிருட்டிணன் கொலை வரை

திமுக ஆட்சி காலத்தில், அக்கட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்கள், எதிரிகள் என பலரின் கதை, சந்தடி இல்லாமல் முடிக்கப்பட்டது. பல கொலைகளுக்கு இன்று வரை விடையில்லை.
1971ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியபோது, தகுதியற்றவருக்கு டாக்டர் பட்டமா என கேள்வி எழுப்பிய மாணவர் உதயகுமாரின் கதி என்னவானது என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியவாய்ப்பில்லை. கருணாநிதிக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்குள் புகுந்த காவல்துறை ஒருபுறம் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது, குண்டர் படை ஒன்று உதயகுமாரின் கதையை முடித்தது. பெற்ற மகனை இழந்து துக்கத்தில் துடிதுடித்துப்போன அவரது தந்தையே, உதயகுமார் உடலைப் பார்த்து இது என் மகன் இல்லை என வாக்குமூலம் அளித்தார். இதன்மூலம் எந்த அளவிற்கு அவர் மிரட்டப்பட்டார் என்பதை அறியலாம். இறந்தது உதயகுமார் தான் என நீதிபதி, என்.எஸ்.ராமசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் அறிக்கை கொடுத்தும், கருணாநிதியோ, திமுகவினரோ தண்டிக்கப்படவில்லை.

1996 முதல் 2001வரையிலான திமுக ஆட்சியில், மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தவர், அண்ணாநகர் ரமேஷ். ஸ்டாலின் தனது ஊழல்களை ரமேஷ் மூலமாகவே நடத்துவதாகவும் கூறப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், ரமேஷ் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க முயன்றபோது, அவர் மாயமானார். 2001 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி, ரமேஷ், அவரது மனைவி, அவரது 3 குழந்தைகளின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது. ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக திமுக கூறினாலும், அதற்கான காரணங்களைக் கூற முடியவில்லை. அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், அண்ணாநகர் ரமேஷின் இறப்பு தற்கொலை அல்ல கொலை’ என்று சட்டப்பேரவையிலேயே கூறினார். இருப்பினும் உரிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், ஏற்பட்ட காலதாமதம், ஆட்சி மாற்றம் போன்றவற்றால், ஸ்டாலின் தண்டனை பெறாமல் தப்பினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷா. 2011ம் ஆண்டு மே 16ஆம் தேதி சாதிக் பாட்சா உடல் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது இல்லத்தில் மீட்கப்பட்டது. அவர் இறப்பு தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன? எந்த ரகசியத்தை மறைக்க அவரது வாய் நிரந்தரமாக மூடப்பட்டது? – என்ற கேள்விகள் அப்போது எழுந்தன. இந்த வழக்கிலும் உரிய சாட்சியங்கள் இல்லாததால் மட்டுமே திமுக தப்பியது.

இதுமட்டுமல்ல, திமுக குடும்பச் சண்டையில், தினகரன் பத்திரிக்கையில் பணியாற்றிய அப்பாவி ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தது, மறக்க முடியாத துயரச் சம்பவம். இந்தச் சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்த அழகிரி, அந்த குற்றத்திற்காக ஒரு நாள் கூட சிறையில் அடைக்கப்படவில்லை.

திமுக பிரமுகரும் அழகிரியின் தீவிர ஆதரவாளருமான பொட்டு சுரேஷ், அழகிரியின் ஆதரவாளர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அழகிரியின் தீவிர ஆதரவாளரான அட்டாக் பாண்டி முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியை உலுக்கியது. ராமஜெயத்தின் மீது பல்வேறு புகார்கள் இருந்த நிலையில், உட்கட்சி பிரச்னை காரணமாக கொல்லப்பட்டாரா என்ற சந்தேகமும் நிலவுகிறது.

இது தவிர லீலாவதி கொலை முதல் தா.கிருட்டிணன் கொலை வரையில் பல அரசியல் கொலைகள் திமுகவின் ஆட்சிக் காலங்களில்தான் அரங்கேறியுள்ளன. அவற்றின் விசாரணைகளை திமுக ஒருபோதும் நேர்மையாக எதிர்கொண்டது கிடையாது. இதில் அதிமுக அரசைப் பற்றி அவதூறு பரப்ப, எந்தத் தகுதியும் தார்மீக உரிமையும் அவர்களுக்குக் கிடையாது என்பதை நாடறியும்.

 

 

Exit mobile version