நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்மா மினி கிளினிக்கை, மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அவரிக்காடு ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் இயங்கிவருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள், இதில் மருத்துவம் பார்த்து பயனடைந்து வருகின்றனர். இந்தநிலையில், மர்ம நபர்கள் சிலர், அம்மா மினி கிளினிக்கில் உள்ள பேனர்களை கிழித்தெறிந்து, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post