தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கல்லூரி மாணவர்கள் 296 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூட்டணி பற்றி சிந்திக்காமல் தேர்தல் பணிகளை செய்துவருவது அதிமுக என்றும், தேர்தல் பணிகளில் அதிமுக முன்னிலையில் செயல்படுகிறது என்றும் கூறினார். மேலும் கூட்டணி பற்றி கவலைப்படும் கட்சி தான் திமுக எனவும் விமர்சித்தார்.