மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கூடாது என திமுக அராஜகம்

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருந்ததால், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுகவினர் மனு அளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு பெண்கள் கலைக் கல்லூரியில், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. 10-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ரூபி சசிகலா ஆயிரத்து 745 வாக்குகள் பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட ஜோஸ் பின் சுசிலா ஆயிரத்து 740 வாக்குகள் பெற்றார்.

இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட குளறுபடியால், திமுக 6 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனு அளித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என்று அதிகாரிகள் முன்னிலையில் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். திமுகவினரின் அராஜக செயலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version