திமுக பின்னணியில் இயங்கும் அறப்போர் இயக்கம்…

தமிழக அரசின் மீது அவதூறுகளை பரப்பி வரும் அறப்போர் இயக்கத்தை, அரசியல் ஆதாயத்திற்காக திமுக பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது. ஊழலை ஒழிக்கிறேன் என கூறிக்கொண்டு, சில அமைப்புகள் சுய விளம்பரத்திற்காகவும், எதிர் தரப்பினரிடம் பணத்தை பெற்றுக் கொண்டும் அரசின் மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன. இந்த வரிசையில் ஒரு அமைப்பு தான் அறப்போர் இயக்கம்.

அண்மையில் அறப்போர் இயக்கத்தினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சென்னை மாநகராட்சி டென்டரில் முறைகேடு நடைபெறுவதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். மேலும் சாலை ஒப்பந்த பணியை ஏற்ற மேனகா அன்ட் கோ நிறுவனத்தின் மீதும் அவதூறு கருத்துக்களை வெளியிட்டனர். இந்நிலையில் மேனகா அன்ட் கோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தினர் மீது 2 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தது.

இது குறித்து அறப்போர் இயக்கத்தினருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அறப்போர் இயக்கத்தினர் அண்மையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர். இதன் மூலம் அறப்போர் இயக்கத்தின் பின்னணியில் திமுக இருப்பதும், அந்த இயக்கத்தை ஆட்டி வைப்பதும் திமுக தான் என்பது அம்பலமாகியுள்ளது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் ஒரு அமைப்பு, திமுக அலுவலகத்திற்கு செல்கிறது என்றால், அவர்களின் உண்மை தன்மை எப்படி இருக்கும் என்பதை மக்களே அறிந்து கொள்வார்கள்.

அதிமுக அரசின் மீது திமுக நேரடியாக ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால், அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதால், குறுக்கு வழியில், பணம் கொடுத்து சிலரை தூண்டுவிட்டு வருகிறது திமுக.

Exit mobile version