ஆவுடையார்கோவிலை சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கோவையை சேர்ந்த குமார் என்பவரிடம் 4 லட்சம் ரூபாய் கடனை, மாத வட்டி மூலம் பெற்றுள்ளார். சில மாதங்களாக வட்டி கட்டாமல் இருந்த முத்துமாணிக்கத்தை தொடர்பு கொண்ட குமாரின் உறவினரான முருகேசன், குமாருக்கு தரவேண்டிய கடன், வட்டி தொகையை கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து, முத்துமாணிக்கம் புகாரளித்த நிலையில், இரு தரப்பையும் அழைத்து பேசிய போலீசார், 4 மாத தவணையாக பணத்தை திருப்பி அளிக்க அறிவுறுத்தினர். ஆனால், புகார் அளித்த முத்துமாணிக்கத்தின் மீதே, திமுக நிர்வாகிகள் உதவியுடன் மோசடி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த முத்துமாணிக்கம், விடியா திமுக ஆட்சியில் கந்துவட்டி பிரச்சனை அதிகரித்து வருவதால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.
Discussion about this post