தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை தவறாது நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். மக்களவை மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விருதுநகர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து முதலமைச்சர் வாக்குசேகரித்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால், உயர் கல்வி பயில்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை தவறாது நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு தான் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
பொய்யான வாக்குறுதிகளை கூறி, திமுக மக்களை ஏமாற்றுவதாகவும், இதுவரை தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை திமுக நிறைவேற்றவில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.