இரண்டு வாரங்களுக்கு முன்பு திமுகவின் பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் பண்ணை வீட்டிலும், அவரது மகன் (திமுக வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர்) கதிர் ஆனந்த் அலுவலகங்களிலும் ரூ.10 கோடிக்கு மேல் வருமான வரித்துறையால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் குடியரசு தலைவருக்கு வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்ய பரிந்துரை செய்தது.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி ரத்து செய்யப்படுவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் குடியரசு தலைவர்இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
ஊழல் செய்வதில் வல்லமை படைத்த திமுக கட்சியால் தமிழ்நாட்டிற்கு களங்கம் ஏற்பட்டது. இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக இந்தியாவில் ஒரு நாடாளுமன்ற தொகுதி ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.