தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற வேண்டுமென அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். இந்து கடவுள்களையும், இந்து மதத்தையும் தொடர்ந்து விமர்சித்து வரும் திமுகவினர் தற்போது கோயில் கோயிலாக சென்று வழிபாடு நடத்தி வருவது தேர்தல் நேர நாடகம் என பொதுமக்களும், அரசியல் விமர்சகர்களும் விமர்சித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் மட்டுமில்லாமல், பல நேரங்களில் கோயில்களில் சுவாமி தரிசனம் என்பது திமுக தலைவர்களின் குடும்பத்தினர் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழிக்காக அவரது தாயார் ராசாத்தி அம்மாள், திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி உள்ளார்.
அண்மையில் காசியில் உள்ள கோயில்களில் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்ததாக சமூக வலைதளங்களில் வெளியாக காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.