நீலகிரியில் கேள்வி கேட்ட பெண்ணை தரக்குறைவாக பேசிய திமுக எம்.பி அ.ராசா

கேள்வி கேட்ட பெண்ணை ஒருமையில் பேசிய, நீலகிரி திமுக பாரளுமன்ற உறுப்பினர் அ. இராசாவின் வாகனத்தை மறித்து அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழக அரசின் சார்பில், முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் காரணமாக அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பெயரளவிற்கு பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலினைப் போல், அக்கட்சியின் நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் ஆ. ராசாவும் சாவகாசமாக இன்று தொகுதியை பார்வையிட சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், ”ஓட்டு கேட்டு வரும் நீங்கள், தொகுதி பாதிக்கப்பட்டபோது எங்கு சென்றீர்கள் என்று கேட்டதால் ஆ. ராசா திகைத்து போனார். பின்னர் கேள்வி கேட்ட பெண்களை ஒருமையில் தரைகுறைவாக பேசியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அ.ராசாவின் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, காவலர்களின் உதவியுடன், உடனடியாக அப்பகுதியை விட்டு அவர் வெளியேறினார்.

Exit mobile version