மருத்துவ கல்லூரி அமைக்க திமுக எம்.எல்.ஏ முயற்சி: காங்கிரஸ் எம்.பி. பேச்சால் சர்ச்சை

திமுக எம்.எல்.ஏ சொந்தமாக மருத்துவக் கல்லூரி அமைக்க முயற்சி செய்து வருகிறாரே தவிர, அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை விடுக்கவில்லை என்ற காங்கிரஸ் எம்.பி-யின் பேச்சு திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்களா? என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார், மருத்துவ கல்லூரி அமைய யார் நடவடிக்கை எடுத்தாலும் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்வதாக தெரிவித்தார்.

திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக, திமுக சட்ட உறுப்பினர் ராஜேந்திரன் உங்களிடம் கோரிக்கை வைத்தாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி., அப்படி ஒரு கோரிக்கையை சட்ட உறுப்பினர் ராஜேந்திரன் தன்னிடம் வைக்கவில்லை என்றார்.சொந்தமாக மருத்துவக் கல்லூரி அமைக்க திமுக எம்.எல்.ஏ. முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு நான் உதவி செய்வேன் என்றும் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்காமல், தனிப்பட்ட நபரின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் காங்கிரஸ் எம்.பியின் பேச்சும், திமுக எம்.எல்.ஏ.வின் சுயநலமும் செய்தியாளர் சந்திப்பில் வெளிச்சத்திற்கு வந்தது.

Exit mobile version