திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பல்வேறு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி வருவதாக 2 கோடியே 80 லட்சம் முறைகேடு செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று சென்னை, கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்திய குற்றபிரிவு காவல் துறையினர், அவரின் மந்தைவெளி இல்லத்திற்கு சீல் வைத்தனர். சென்னையில் 9 இடங்கள், கரூரில் 5 இடங்களிலும் நடைபெற்ற சோதனையில், மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. மேலும், வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்ற விவரங்களின் பட்டியலும் கைப்பற்றப்பட்டது. இதைத்தவிர மடிக்கணினி, பென் டிரைவ், மெமரிகார்டு, வங்கி இருப்புப் பெட்டக சாவிகளும் கைப்பற்றப்பட்டன.