திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வீட்டில் நாளை சோதனை?

சென்னை மந்தைவெளியில் சீல் வைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியின் வீட்டில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நாளை சோதனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளுக்காக பலரிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில்,  கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதற்கிடையே, சென்னை மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சீல் வைத்தனர். நீதிமன்ற அனுமதியுடன் இந்த வீட்டில் நாளை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சோதனை நடத்த முடிவு செய்துள்ளது. 

Exit mobile version