திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை

தற்கொலைக்கு முயன்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்.

திமுக உட்கட்சி பூசல் காரணமாக, கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஆலங்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, அதிகளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து மயக்க நிலையில் இருந்த அவர், நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை சுயநினைவின்றி இருப்பதாகவும், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பூங்கோதை, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்து, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version