செங்கல்பட்டில் நில தகராறில் துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் சட்டவிரோதமாக துப்பாக்கி தோட்டாக்கள் தயாரித்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு விவகாரத்தில் ஜாமீன் கோரி திருப்போரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இதயவர்மன் பயன்படுத்தி வரும் மூன்று துப்பாக்கிகளில் 2 துப்பாக்கிகளுக்கு உரிமம் இல்லை எனவும் உரிமம் புதிப்பிக்காத நிலையில் காவல்நிலையத்தில் துப்பாக்கியை ஒப்படைக்காமல் தன்னிடம் வைத்திருப்பது ஏன் என்று வாதிடப்பட்டது. தொடர்ந்து காவல்துறை சார்பில் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் சட்டவிரோதமாக துப்பாக்கி தோட்டாக்கள் தயாரித்துள்ளதாகவும், இதுவரை 50க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் காவல்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.