மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், கடந்த 2 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை தலைமை மருத்துவர் முகமது ரீலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜெ.அன்பழகனின் உடல் நலம் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பழகனுக்கு, அரசு சார்பில், அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்போது தெரிவித்தார். மேலும், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் விரைவில் குணமடைய வேண்டி கொள்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக எம்எல்ஏ குணமடைய இறைவனை வேண்டி கொள்கிறேன் : முதலமைச்சர்!
-
By Web Team

- Categories: Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: cmedapaadipalanisamyj.anbzhagannewsjthe DMKWith regard to health
Related Content

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023