விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துமனையில், P.M கேர்ஸ் நிதியின் மூலம் அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை, தங்கள் முயற்சியில் அமைக்கப்பட்டது போல் வருவாய்த் துறை அமைச்சர் பேசி பெருமையடித்தது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொரோனா 2 ஆம் அலை பாதிப்பின் போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக இருந்தது. இதையடுத்து, மத்திய அரசு பி.எம் கேர்ஸ் நிதியின் கீழ், ஒரு மாவட்டத்தில் குறைந்தது 2 இடங்களிலாவது ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில், 1 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எந்த சம்மந்தமும் இல்லாத அமைச்சர்களான வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்துள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்தின், வாய்க்கூசாமல், முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சியால் ஆக்சிஜன் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக பொய்யை அவிழ்த்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அறிக்கையை பார்த்து வாசித்த அமைச்சருக்கு, 1 புள்ளி 86 கோடிக்கும், 186 கோடிக்கு வித்தியாசம் தெரியாமல் உளறினார்.
அமைச்சரின் பொய்கள் மற்றும் உளறலைக் கேட்டு, அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.