மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தமிழக உரிமைகளை காவு கொடுத்த கட்சி திமுக என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு நல்ல திட்டங்களுக்கு மத்திய அரசு உதவி செய்து வருவதாக கூறினார். எந்த திட்டமாக இருந்தாலும் மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டமாக இருந்தால் மட்டுமே தமிழக அரசு அனுமதிக்குமென அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.