போலி பத்திரங்கள் மூலம் கோயில் இடத்தை அபகரிக்க முயற்சிக்கும் திமுகவினர்

வேலூரில், சுமார் 2 ஏக்கர் கோவில் இடத்தை திமுகவினர் அபகரிக்க முயற்சிப்பதாகவும், போலி பத்திரங்கள் மூலம் மிரட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூர் பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் உள்ளது. 25 ஆண்டு காலமாக கோவில் உள்ள இந்த இடத்தை மக்கள் பயன்பெறும் வகையில், சுத்தம் செய்து, கோவில் மற்றும் சமுதாயக்கூடம் கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அங்கு வந்த திமுகவினர், இது, கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடம் என்றும், இதனை கூட்டுறவு நல சங்கத்திற்காக எடுத்துக் கொள்ளப் போவதாகவும் இடத்தை விட்டு வெளியேறும்படி மக்களை மிரட்டி உள்ளனர். இதற்கு பொதுமக்கள் மறுத்ததை அடுத்து அப்பகுதியில் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

Exit mobile version