சிவகங்கை மாவட்டத்தில், கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவினரை தடுத்ததால், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட 8 பேர் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, அமைச்சர் பாஸ்கரன் நேரில் நலம் விசாரித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட முயன்றுள்ளனர். இதனையடுத்து அவர்களை தடுத்த அ.தி.மு.கவினரை தாக்கியுள்ளனர். இதில் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். அதேபோல், கல்லல் ஒன்றியத்திலும் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதை தட்டிக் கேட்ட அதிமுகவினரை ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இதனையடுத்து, காயமடைந்த அதிமுகவினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.