சாராயம் விற்பனை செய்த திமுக நிர்வாகி உட்பட 5 பேர் கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்பனை செய்த திண்டிவனம் நகர திமுக இளைஞரணி நிர்வாகி உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச் சாராய விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனம் மற்றும் ஒலக்கூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏரிக்கரை பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்த திமுக பிரமுகர் குமரவேல், அருண்குமார், ஆதவன், டில்லிபாபு மற்றும் பாலா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Exit mobile version