குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான திமுக கடிதம் பரிசீலனையில் உள்ளது-சபாநாயகர்

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் கொடுத்துள்ளதாகவும், அதனை ஆய்வு செய்து வருவதாகவும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் கொடுத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். திமுகவின் கடிதத்தை ஆய்வு செய்து வருவதாகவும், அதனை எப்போது பேரவையில் எடுப்பது என்று ஆய்வு செய்து வருவதாகவும் சபாநாயகர் தனபால் கூறினார். தீர்மானம் கொண்டு வர திமுக கொடுத்த கடிதம் ஆய்வில் இருப்பதால், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஸ்டாலின் பேரவையில் விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் தனபால் தெளிவான விளக்கத்தை அளித்தார். இதனை ஏற்க மறுத்த திமுக சட்டமன்ற உறுப்பினர், வழக்கம்போல் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Exit mobile version