கூட்டணி கட்சிகள் அதிக தொகுதி கேட்பதால் திமுக தலைமை அதிர்ச்சி!

திமுக கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டு அடம் பிடிப்பதால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யமுடியாமல் திமுக தலைமை விழிப்பிதுங்கி நிற்கிறது.

திமுக கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் 35 இடங்களை கேட்கும் நிலையில், அக்கட்சிக்கு 20 தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப்போது அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 15 தொகுதிகள் கேட்கும் நிலையில் அக்கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளை மட்டுமே தர திமுக முன்வந்துள்ளது. மதிமுகவை பொருத்தவரை 12 தொகுதிகள் கேட்டுள்ளதுடன் தனிச்சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என வைகோ பகிரங்கமாக அறிவித்த நிலையில், அக்கட்சிக்கு 6 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என திமுக தலைமை கூறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுபுறம் விடுதலை சிறுத்தைகள் கட்சி 15 தொகுதிகள் கேட்பதால் திமுக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளை தவிர மற்ற எந்த கட்சியுடனும் கூட்டணி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் திமுக தலைமை தவித்து வருகிறது.

 

Exit mobile version