மூதறிஞர் ராஜாஜியின் 141வது பிறந்த நாளையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள ராஜாஜியின் திருவுருவச் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே, வைக்கப்பட்டிருந்த ராஜாஜியின் உருவப் படத்திற்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதிமுக நிர்வாகிகள் மற்றும் பலர் ராஜாஜியின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
திமுக தலைவர் ஸ்டாலின், நித்தியானந்தாவைப் போல தனித் தீவை வாங்கிதான் முதலமைச்சர் ஆக முடியும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மூதறிஞர் ராஜாஜியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு குழப்பவாதி என்று குறிப்பிட்டார்.
Discussion about this post