தலைமைப் பண்பும், அனுபவமும் இல்லாதவர் திமுக தலைவர் ஸ்டாலின்

தலைமைப் பண்பும், அனுபவமும் இல்லாதவர்தான் திமுக தலைவர் ஸ்டாலின் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே, மாராப்பட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, வரும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்பதை உணர்ந்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், தோல்வி பயத்தால் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறி வருவதாக கூறினார். ஸ்டாலினுக்கு தலைமைப் பண்பும், அனுபவமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version