திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அல்ல யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கலின் போது அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், பெரிய புள்ளான் ஆகியோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என தெரிவித்தார். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெரும் என நம்பிக்கை தெரிவித்த அவர், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அல்ல யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என உறுதிபடக் கூறினார்.