திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை தனது உளறல் பேச்சால் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வசனம் எழுதி சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தின் துவக்க காட்சி குறித்து பேசினார். அதில் நடிகர் சிவாஜி கணேசன் பர்மாவில் இருந்து இந்தியா திரும்பியதாக கதை எழுதப்பட்டு இருக்கும். அதைபற்றி பேசிய ஸ்டாலின் சிலோனில் இருந்து இந்தியா திரும்பிய சிவாஜி கணேசன் என்று கூறி உளறி மேடையில் பேசினார். அதைபோல், கேரள முதல்வர் பினராய் விஜயன் பற்றி பேசும் போது கேரள முதல்வர் பினராய் ராய் என்று மீண்டும் உளறிக் கொட்டினார். ஒரு எதிர்க்கட்சி தலைவராக உள்ள ஸ்டாலினுக்கு பக்கத்து மாநில முதல்வர் பெயரைக்கூட சரியாக சொல்லத் தெரியவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சலிப்புடன் பேசிக்கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.