எ.வ.வேலுவுக்கு செக் – 2வது நாளாக விடிய விடிய நடக்கும் சோதனை!

திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி வேட்பாளருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரி சோதனை விடிய விடிய 2வது நாளாக தொடர்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. எ.வ.வேலுவின் வீடு, அவருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம் ஆகியற்றிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதற்கு முந்தைய தினம், கல்லூரி வளாகத்திலுள்ள விருந்தினர் மாளிகையில், ஸ்டாலின் தங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று ஆரம்பித்த சோதனை விடியவிடிய இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கரூரில் உள்ள எ.வ.வேலுவுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் இருந்து 3 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடிய விடிய நடைபெற்று வரும் சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுள்ளதாகவும், இதுகுறித்து எ.வ.வேலுவின் நிறுவன ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Exit mobile version