திமுக ஐ.டி. விங்கில் பணியாற்றிய கறுப்பர் கூட்டம் சேனல் நிர்வாகி…! காவல்துறை விசாரணையில் அம்பலம்!!!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன் திமுக ஐடி பிரிவில் செயல்பட்டு வந்தது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசி பதிவிட்டது தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன், சுரேந்திரன், குகன், சோமசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வந்த கறுப்பர் கூட்டம் சேனல் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஹிந்து மத கடவுள்களை இழிவுப்படுத்தும் வகையில் பதிவிடப்பட்டிருந்த 500க்கும் அதிகமான வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக நீக்கினர். இதனை தொடர்ந்து, செந்தில்வாசனை 4 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் செந்தில்வாசன் பணியாற்றியது தெரியவந்துள்ளது. கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்த நிலையில் கறுப்பர் கூட்டம் சேனல் நிர்வாகியே திமுக ஐ.டி.விங்கில் பணியாற்றியது தற்போது அம்பலமாகியுள்ளது.

Exit mobile version