திமுக வாரிசு அரசியல் செய்து வருகிறது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திமுக வாரிசு அரசியல் செய்து வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் சி.மகேந்திரன் அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக வாரிசு அரசியல் செய்வதாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு மீது பொய்யான குற்றசாட்டுகளை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் சிறப்பான முறையில் தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து வருவதாக அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version