திமுக ஒரு கார்பரேட் கட்சி எனவும், மக்களுக்கான கட்சி அல்ல எனவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
திருவாரூரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு நகர கழகம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா. அதனை தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர், திமுகவையும், ஸ்டாலினையும் கடுமையாக சாடினார். எத்தனை கிஷோர் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்துவிட முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.