மதுரையில் காவல் ஆய்வாளரை மிரட்டும் திமுகவினர்

மதுரையில் காவல்நிலையத்திற்கு சென்ற திமுகவினர், காவல் ஆய்வாளரை மிரட்டும் தொணியில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, திமுகவினர் அராஜகப் போக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் திமுக பகுதி பொறுப்பாளரான மிசா பாண்டியன், தன் உறவினருடன், ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஆய்வாளர் சேதுமணி மாதவனிடம் தங்களுக்குப் பிடிக்காத நபர் மீது வழக்கு பதியச் சொல்லி மிரட்டியுள்ளார். புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதாக ஆய்வாளர் தெரிவித்தும், மிசாபாண்டியனும், உறவினரும், காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்கிற அச்சம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version