டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிமுக புதிய அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறும் மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக ஷாகேத் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகத்தைப் பார்வையிடுட்டார். முதலமைச்சருடன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், டெல்லி மாநில அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.