சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டம் கூட்டியதாக திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் திமுக சார்பில் நிலத்திட்ட உதவிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரை ராணிப்பேட்டை சாலையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நிற்க வைத்து நிவாரணம் வழங்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறி பொது இடத்தில் நோய் தொற்று ஏற்படும் வகையில் செயல்பட்டதாக சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட 13 பேர் மீது ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.