நீர்மேலாண்மை திட்டத்திற்கு திமுக எந்தவொரு திட்டமும் செயல்படுத்தவில்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் பொதுமக்களின் குறைதீர்க்கும் திட்டத்தின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் குறித்த பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், அரசு மேற்கொண்டு வரும் நலத்திட்டப் பணிகள் மற்றும் நிறைவேற்றிய நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கினார். பல்வேறு துறைகளில் மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவித்து அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். அரசின் திட்டங்கள் பற்றி எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அவதூறு கருத்துகளை கூறி வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.