மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவந்தாட்டில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஊராட்சி அளவிலான செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், நாடாளுமன்ற அதிமுக அமோக வெற்றிபெற தொண்டர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.