கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசு; தலைமைக்கழக பேச்சாளர் அனுமோகன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில்
பொதுக்கூட்டம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராயபுரம் மனோ மற்றும் சினிமா நடிகரும் தலைமை கழக பேச்சாளருமான அனுமோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பொதுக்கூட்டத்தில் பேசிய சினிமா நடிகரும் தலைமை கழக பேச்சாளருமான அனுமோகன், சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட திமுக நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டினார். பொதுக் கூட்டத்தில் கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Exit mobile version