விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட புரட்சித்தலைவி ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு,
விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புரட்சித்தலைவி ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டுவரப்பட்டதை நினைவுகூர்ந்துள்ள ஓ.பன்னீர்செல்வம்,
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்கலைக்கழகம் குறித்து எந்த அறிவிப்பும் திமுக அரசு வெளியிடவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் கலைப்பு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மாற்றம் என்ற வரிசையில் புரட்சித்தலைவி ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு இறங்கியுள்ளது கண்டிக்கத்தது என குறிப்பிட்டுள்ளார்.
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பெயர் இருக்கக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியில், திமுக அரசு சதிவேலைகளில் ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர்,
பல்கலைக்கழகத்தை தொடர்ந்து நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.